2021 மே 13, வியாழக்கிழமை

இலங்கைக்கு ரூ.180 மில்லியன் கடனுதவி

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் அவசர, நெருக்கடி நிலைமை என்றச் செயற்றிட்டத்தின் கீழ், இந்நிதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பீஜிங்கில் AIIB துணைத் தலைவர் டி.ஜே.பாண்டியனுடன், அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, இலங்கையின் தூதுவர் பாலித கோஹனாவுக்கு, இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்துக்கு நிதியளிக்கவும் வங்கி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .