Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து தெற்கு வேல்ஸ் நகரம் கார்டிஃப் பிரதேசத்தில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா என தெரியவந்துள்ளது.
சம்பவ தினமான 21 ஆம் திகதி அன்று அந்நாட்டு நேரப்படி காலை 7.37 மணியளவில் கார்டிஃப் பகுதியில் உள்ள ஒரு வீதியில் குறித்த பெண் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவசர உதவியாளர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற தீவிரமாக முயன்ற போதும் அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கார்டிஃப் பகுதியைச் சேர்ந்த 37 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு வேல்ஸ் பொலிஸார். தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .