2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறையின் மோசமான நிலை

Freelancer   / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே சேவையில் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அப்பாடசாலைகளில் 3,065 பாடசாலைகளில் 10-க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. 

அப்பாடசாலைகளுள் ஒரு தேசிய பாடசாலையும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, 1,645 அரச பாடசாலைகளில் 50 க்கும் குறைவான மாணவர்களே உள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X