Freelancer / 2025 டிசெம்பர் 25 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் பெரும் நிலப்பகுதிகள் சுமார் 40 அடி ஆழத்திற்கு இடிந்து விழுந்ததால், இந்த கிராமங்கள் மனித வாழ்விற்குப் பாதுகாப்பற்றதாக மாறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவி இயக்குநர் எல்.ஏ.கே.ரணவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உடத்தாவ, நெலும் மாலை, கல நாக, மட கெலே மற்றும் உட கல் தெபொக்காவ ஆகிய ஐந்து கிராமங்களே மனிதர்கள் வசிப்பதற்கு பொருத்தமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடத்தாவ கிராமத்தில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முழுமையாக புதைந்துவிட்டன என்றும், இதுவரை 26 குடியிருப்பாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், இடிபாடுகளுக்கு அடியில் 30 முதல் 40 அடி ஆழத்தில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக நம்பப்படுவதால், காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது என்றார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .