Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் கத்மண்துவிற்கும் இடையிலான விமான பயணங்களை புதன்கிழமை (10) காலை முதல் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தகவல் தொடர்புத் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அதன்படி, புதன்கிழமை (10) காலை 08.35 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேபாளத்தின் கத்மண்துவிற்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-181 ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அந் நாட்டில் உள்ள அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை 1979 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளுமாறு தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
டி.கே.ஜி.கபில
23 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
1 hours ago