2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டத் தயார்

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

  இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுக்கு தேவையேற்படின், எந்த சந்தர்ப்பத்திலும் உதவிக்கரம் நீட்டத் தயாராகவுள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின்  பொதுச் செயலாளர் பெட்றீசியா ஸ்கொட்லன்ட் சார்பில் அவரது பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கமைய, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானதென்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே நாடாளுமன்றத்தைக் கூட்டி, நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரைவாக தீர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையே பொதுநலவாய நாடுகள் சபை எதிர்ப்பார்ப்தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .