Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
S.Renuka / 2025 மே 28 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள திறமையான தொழிலாளர்களுக்கு பஹ்ரைனில் ஏராளமான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் இருப்பதாகக் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க கூறினார்.
பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்த பஹ்ரைனில் இயங்கும் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக பணியகத்தின் தலைவர் பஹ்ரைனுக்கு விஜயம் செய்திருந்தார்.
அத்துடன், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிபூண்டுள்ளது என்று கூறிய கோசல விக்ரமசிங்க, பஹ்ரைன் இராச்சியத்தில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தொடர்ச்சியான ஆதரவையும் ஈடுபாட்டையும் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் பேசிய பஹ்ரைனுக்கான இலங்கை தூதர்ஷானிகா திசாநாயக்க, திறமையான பணியாளர்களை விரிவுபடுத்துவதற்கும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஏற்ப, வேலைவாய்ப்புக்காக திறமையான தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .