2021 மே 08, சனிக்கிழமை

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 28 கிலோ தங்கம் இந்தியாவில் பறிமுதல்

Editorial   / 2017 ஜூலை 24 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து கடல்வழியாக கடத்தப்பட்ட 28 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று வெவ்வேறு தேடுதல் நடவடிக்கைகளில் இந்தத் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோயம்புத்தூரில் 14 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இராமநாதபுரத்தில் இரு இடங்களில் மேலும் 14 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X