2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சு அறிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைத் தொடர்பில், அவுஸ்திரேலியாவும் அவதானித்து வருவதாகவும், ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றம், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய, தீர்த்துக் கொள்ளுமாறும் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மெரிஸ் பேனே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் இலங்கை மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கு மதிப்பளிக்குமாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அமைதியாகத் தீர்த்துக்கொண்டு பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .