2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அதிகள் 470 பேர் இதுவரை திரும்பியுள்ளனர்

Thipaan   / 2016 ஜனவரி 27 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டிலிருந்து, இவ்வாண்டு ஜனவரி 26ஆம் திகதி வரையிலும் தமிழ் அகதிகள் 470 பேர்,  தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

 

இதேவேளை, இந்தியாவிலுள்ள 109 முகாம்களில்; 64,000 பேர் இன்னும் இருக்கின்றனர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து இறுதியாக, கடந்த 26ஆம் திகதியன்று 20 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.  அந்த 20 பேரில், 12 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் குடியமர்த்தப்படுவர் என்று, அவ்வமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X