Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள இலங்கை - இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு, இலங்கையிலிருந்தே பெரும்பாலான ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று இந்திய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சில திட்டமிடல் அதிகாரிகளைத் தவிர, ஏனைய அனைத்து தொழிலுக்கும் இந்தியர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள் என்றும் அதற்கு இலங்கையர்களே தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் அமைந்துள்ள அவசரநிலை முகாமைத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த அம்பியூலன்ஸ் சேவை இலங்கையில் கொண்டுவரப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் பிரகாரம் 80 அம்பியூலன்ஸ்களும் உதவியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் என்று சுமார் 600 இலங்கையர்கள் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.
31 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago