Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா, மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும் தேர்தல் நடந்த 16 மாதங்களில் ஜனாதிபதி மைத்திரியின் அரசாங்கம் பெரும் முன்னேற்றங்களைக் கண்டிருப்பதாகம் அவர் கூறினார்.
நவம்பரில் நான் இலங்கை சென்றிருந்த போது பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயமின்றி செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் கூறினர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் காணிகள் திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. பல மக்கள் மீள்குடியேறி வருகின்றனர்.
இவ்வாறு குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றம் கண்ட, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை நான் முன்னொருபோதும் கண்டதில்ல எனவும் அவர் புகழ்ந்தார்.
இலங்கை 2015இலிருந்து மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறுதலில் உலக சம்பியனாக உள்ளது எனக் கூறிப்பிட்ட அவர் உலக தலைவர்கள் பலரும் தத்தம் அதிகாரங்களை அதிகாரிக்கும் யாப்புத் திருத்தங்களைக் கொண்டு வரும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரத்தை அரசியல் திருத்தம் மூலம் குறைத்துள்ளார் எனக் கூறினார்.
மேலும், ஐ.நா. சமாதானப்படை செயற்பாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்தவாறு உள்ளது. ஆயினும், இடைக்கால நிதி, நிரந்தரமான நல்லிணக்கம், அரசாள்கையின் தரத்தை மேம்படுத்தல், கிடப்பிலுள்ள அல்லது மிக மெதுவாக நடைபெறும் அரச காரியங்களைத் துரிதப்படுத்தல் என்பவை தொடர்பாக பல விடயங்களில் கூடுதல் செயற்பாடுகள் தேவையாக உள்ளன என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
9 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago