2025 ஜூலை 19, சனிக்கிழமை

இளைஞன் படுகொலை : ஐவருக்கு மரண தண்டனை

Freelancer   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞன் ஒருவரை கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லுகளால் தாக்கிபடுகொலை செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட ஏழுவரில் ஐவரை குற்றவாளியாக இனங்கண்டகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, ஐவருக்கும் மரண தண்டனைதீர்ப்பளித்து,

ஏனைய இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார். தற்போது 27 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இருவர், சம்பவம்இடம்பெற்ற போது, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர். அதனால்,அவ்விருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளிய, மோதரை பகுதியில் இரண்டு கோவில்களுக்கு இடையில் வீடொன்றில் வைத்து, இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்னர் 21 வயதான பிரான்சிஸ் சுரஞ்சன் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றங்கள்எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, நிரூபிக்கப்பட்ட மையால், அவர்களைகுற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க,அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனையை, திங்கட்கிழமை (28) விதித்தார்.

2012 செப்டம்பர் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், பிரான்சிஸ்சுரஞ்சன் என்ற இளைஞனை  கிரிக்கெட் மட்டைமற்றும் பொல்லுகளால் தாக்கி படுகொலை செய்தனர் என ஒன்பது பேருக்கு எதிராக சட்டமாஅதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, அதில் இருவர் மரணமடைந்துவிட்டனர்.அதனால், ஏழு பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது  R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X