Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை, ஹல்துமுல்ல – லைபான் பிரிவு சன்வௌி தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்நத வந்த மதுசங்க சாகர என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக மூன்று நண்பர்களுடன் சனிக்கிழமை (03) மாலை குறித்த இடத்துக்கு அவர் சென்றுள்ளார்.
அங்கிருந்து செல்ஃபி எடுப்பதற்கு முயன்ற போது கால் வழுக்கி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பிரதேச மக்களும் பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் பள்ளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
34 minute ago
43 minute ago
43 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
43 minute ago
55 minute ago