Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைக் காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடற்படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டிணன் கொமாண்டர் சம்பத் தயானந்தவை, எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன டீ சில்வா, இன்று (25) உத்தரவிட்டார்.
நகரசபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமநாதன் ஆகிய இருவரும், கடந்த 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று முன்தினம் கைதாகியிருந்த கொமாண்டர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபருக்கு, விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago