2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

இஷாரா உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணிநேர தடுப்புக்காவல்

Editorial   / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு புதன்கிழமை (15) இரவு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட  இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களை 72 மணி நேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்க   அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு,நீதிமன்றத்தில்  வியாழக்கிழமை (16) காலை வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்தே நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.   

தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்ட மற்ற சந்தேக நபர்கள் ஜே.கே. பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோர்  ஆவார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற எண் 6 இல் நீதிமன்ற கூண்டில் வைத்து பிப்ரவரி 19 ஆம் திகதி  சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிதாரிக்கு, துப்பாக்கியை சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி   கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, புத்தளத்தில் வைத்து அன்றையதினமே துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .