Freelancer / 2026 மார்ச் 14 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான 'IRIS DENA' கப்பலில் பலியான 84 ஈரானியர்களின் சடலங்கள் விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று (13) இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானதுடன், அதில் சுமார் 180 பேர் இருந்தமை கண்டறியப்பட்டது.
பின்னர் இதிலிருந்து மீட்கப்பட்ட 35 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R
44 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago