2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இருநாள் விவாதம்

Editorial   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில்  ஒத்திவைப்பு பிரேரணை  மீதான விவாதத்தை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றம் நாளை (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கூடவுள்ளது.

ஆட்கள் பதிவு சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2334/47 இல் வெளியிடப்பட்ட உத்தரவுகள் நாளை (19) விவாதிக்கப்பட உள்ளன.

அதனையடுத்து சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி எண் 2346/02 இல் வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகள் புதன் (20) விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளன.அதன் பின்னர் ஆளுங்கட்சியால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணை மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .