2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

உண்மையைச் சொன்னால் எம்.பிக்களுக்கு அவமானம்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கெதிராக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்தான விசாரணை குறித்துக் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்விடயம் தொடர்பாக தான் ஆதாரமளித்தால், தனது நாடாளுமன்ற சகாக்கள் சிலர், அவமானமடைவர் எனத் தெரிவித்தார்.

குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நேற்று எழுப்பிய ஒழுங்குப்பிரச்சினைக்குப்  பதிலளிக்கும்போதே, சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பாதுகாவலர் சபாநாயகரே எனத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, ஆகவே, சபாநாயகருக்கெதிரான எந்தவொரு அச்சுறுத்தலும், அனைத்து உறுப்பினர்களினதும் அதிக கரிசனத்துக்கு உரியது எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், அவ்விடயம் தொடர்பான சில விடயங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அவமானப்படுத்துமெனவும் அதன் காரணமாக அவற்றை வெளியிட விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். எனினும், பொலிஸ் விசாரணைகளின் போது அவசியப்படின், அவற்றை வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, குறித்த தொலைபேசி அழைப்பு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடமிருந்தே மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X