2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

உயிரிழந்த மாணவன் தொடர்பில் வௌியான தகவல்

Freelancer   / 2025 நவம்பர் 10 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புத்தேகம, தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவன் என பொலிஸார் தெரிவித்தனர். 

வலயக் கல்வி காரியாலயத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்கு ஒன்றுக்கு சென்று திரும்பிய போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

உயிரிழந்தவர் 16 வயதுடைய தலாவ ஹங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

இதேவேளை, உயிரிழந்த மாணவனின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

தம்புத்தேகமப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X