Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
George / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
66வருடருடங்களாக நாட்டின் எதிர்காலம் மற்றும் நாட்டுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை வெற்றிக்கொண்டு இந்நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு தமது உயிரையே அர்பணித்த இராணுவ வீரர்கள் மிகவும் மதிப்புக்குரியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
இராணுவத்தினரின் 66ஆவது ஆண்டு விழா மற்றும் இராணுவ தின நிகழ்வு, பனாங்கொட இராணுவ முகாமில் சனிக்கிழமை(10) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போதும், இந்நாட்டுக்கு எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட போதும், இராணுவத்தினர், தமது உயிரைத் தியாகம் செய்து தாய்நாட்டை பாதுகாத்தனர்.
இதற்காக அவர்கள் செய்த அர்ப்பணிப்பு அளப்பரியது. அவர்கள் மட்டுமின்றி தாய்நாட்டை பாதுகாக்க அவர்களை அனுப்பிவைத்த அவர்களது குடும்பத்தினரும் மிகப்பெரும் தியாகம் செய்துள்ளனர்.
தாய்நாட்டுக்காகவும் பொதுமக்களின் சுதந்திரமாக வாழ்வதற்கும் தம்மையே அர்பணித்துள்ள இராணுவ வீரர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன்களை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வீட்டுக்கடன், கல்வி உதவி உட்பட பல்வேறு உதவிகள் அவர்களுக்காக வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள. தாய்நாட்டை பாதுகாக்கும் பாரிய கடமை, பொறுப்பு என்பன இராணுவத்தினரிடம் உள்ளன' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago
18 May 2025