2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்

S.Renuka   / 2025 மே 18 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடத்து முடிந்த  உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அடிப்படையில், உள்ளூராட்சி  அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில்,  அரசியல் கட்சிகளுக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, தேர்தல் ஆணையத்திடம் (EC) பெயர்ப் பட்டியலை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக, உள்ளூராட்சி அமைப்புகளை நிறுவுவது மேலும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் ஒரு வாரத்திற்குள் தங்கள் பெயர்ப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த வர்த்தமானி, தேர்தல் ஆணையம் அனைத்துப் பட்டியல்களையும் பெற்ற பின்னரே வெளியிடப்படும்.

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயருக்கான தேர்தலை அடுத்த ஜூன் மாதம் 2ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X