2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க தீர்மானம்

Freelancer   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் ஏற்கெனவே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த அமைச்சரவைப் பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோர் இதுதொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

அந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியிருந்தது.

உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம், உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக் காலத்தை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உள்ள நிலையிலேயே, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் ஜனக பண்டார சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .