2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

‘ஊழல் பேர்வழிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்’

Niroshini   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் ஊழல் பேர்வழிகள் என பல்வேறு தரப்பினராலும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னுதாரணமாகச் செயற்படாததன் காரணத்தாலேயே, இந்த ஒழுக்கக் கோவை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊழல்வாதிகளே, நாடாளுமன்றத்தில் உள்ளார்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோற்றம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அவ்வாறான விடயங்களே வெளிவருகின்ற வண்ணம் உள்ளன.

“மரபு சார்ந்தவர்களாகவே, இதுவரை காலமும் நாம் செயற்பட்டு வந்தோம். தற்போது மரபுக்கு அப்பால் செல்லும் முகமாகவே, இக்கோவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த கால அரசியல் கலாசார வீழ்ச்சி காரணமாகவே, இந்த ஒழுக்கக் கோவையைக் கொண்டுவரக் காரணமாகும்.

“பொதுமக்களின் பணம், சொத்துகளைப் பயன்படுத்துவதாக உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது. அவ்விடயம் தொடர்பில், இக்கோவையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.“அத்துடன், ஆலோசனைக்குழு மற்றும் துறைசார் மேற்பார்வைக்குழு ஆகியவற்றை மீள ஸ்தாபிக்க வேண்டுமென கொண்டு வரப்பட்ட யோசனை வரவேற்கத்தக்கதாகும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .