2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

எங்கிருந்து எங்கு போனது கொரோனா

Editorial   / 2021 ஏப்ரல் 24 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவுலப்பிட்டியிலிருந்து சென்றவர்களால் பல இடங்களிலும் கொ​ரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அறியமுடிகின்றது.

  • திஸ்ஸமஹாராம, கதிர்காமம் வீதியில் இரு பக்கங்களிலுமுள்ள வீடுகளில் கொரோனா தொற்றாளர்கள் 25 ​பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
  • திவுலப்பிட்டிய பிரதேசத்திலிருந்து கதிர்காமத்துக்கு வந்திருந்த ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனையடுத்து அங்குள்ள 53 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.
  • நிக்கவரெட்டிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
  • மொரட்டுவை பாடசாலையொன்றின் விளையாட்டு குழுவில், அங்கம் வகிக்கும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. காலியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டில் பங்கேற்றிருந்த போதே, அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X