2026 மார்ச் 16, திங்கட்கிழமை

எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

Freelancer   / 2026 மார்ச் 16 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன.

அரபிக்கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும், ஓமன் வளை​கு​டாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இந்த ஜலசந்தி ஈரான் கடல் எல்​லையை அண்மித்து அமைந்துள்ளது. ஆசிய நாடு​களுக்​கான 85 சதவீத கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு ஏற்​றுமதி ஹார்​முஸ் ஜலசந்தி வழியாகவே நடை​பெறுகிறது.

அமெரிக்கா உடனான போர் காரண​மாக இந்த ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் இராணுவம் முடக்கியுள்​ளது. இதன்​காரண​மாக, இந்​தி​யா​வில் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இதற்கு தீர்வு காண பிரதமர் நரேந்​திர மோடி, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதன் பலனாக, ‘ஷிவாலிக்’, ‘நந்​தாதேவி’ ஆகிய இந்​திய கப்​பல்​கள் சுமார் ஒரு லட்​சம் தொன் சமையல் எரிவாயுவுடன் நேற்று முன்​தினம் ஹார்​முஸ் ஜலசந்​தியை பாது​காப்​பாக கடந்​தன. இரு கப்பல்​களும் இன்று அல்​லது நாளை குஜ​ராத்தை வந்தடையும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பெர்​சியன் வளை​குடா பகு​தி​யில் சுமார் 22 இந்திய எண்ணெய் கப்​பல்​கள் ஆங்காங்கே நிறுத்​தப்​பட்டுள்ளன. அந்த கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை பாது​காப்​பாக கடக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இதுதொடர்​பாக இந்​திய கடற்​படை வட்​டாரம் தெரிவிக்கையில்,

ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்​திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன.கடந்த 14 ஆம் திகதி ஹார்​முஸ் ஜலசந்​தியை 2 இந்​திய கப்​பல்​கள் கடந்து சென்​றன.

அந்த கப்​பல்​களுக்கு இந்​திய போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்​கின. பெர்​சியன் வளை​குடா பகு​தி​யில் 3 இந்​திய போர்க் ​கப்​பல்​கள் தயார் நிலை​யில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன. தேவைக்கு ஏற்ப இவை பயன்​படுத்​தப்​படும் என்று தெரிவித்துள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X