Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 13 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
அபிவிருத்திப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் நிராகரிக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (12) ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தைக் கவனமாக மதிப்பீடு செய்து, இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், விவாதத்துக்கும் பொதுமக்கள் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.
ஆனால், அமெரிக்கவுடனான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து, எந்தவித முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த அரசாங்கம் , தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசியமாகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் போல, புதிய அரசாங்கம் இரகசியமாக எம்.சி.சி ஒப்பந்ததில் கைச்சாத்திடாதெனத் திட்டவட்டமாகத் தெரிவித்த அமைச்சர், அந்த ஒப்பந்தத்தில், கலந்துரையாட முடியாதப் பல விடயங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago