Janu / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் எரிபொருள் பவுசர் ஒன்றிலிருந்து சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான எரிபொருளை திருடிய அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 60 லீட்டர் டீசல், 42 லீட்டர் பெட்ரோல், 40 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் எரிபொருளை வெளியேற்றப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், எரிபொருள் ஏற்றிச்சென்ற பவுசர் வண்டியும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி தமிந்த பியதர்ஷன குமார ஹேவா பத்திரணவினால் திங்கட்கிழமை (06) முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து கலவானையிலுள்ள 'லங்கா ஐ.ஓ.சி' (Lanka IOC) எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த பவுசர், விதிமுறைகளை மீறி கடுவலை - மேல் பொம்மிரிய பகுதியிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கேயே எரிபொருள் திருடப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago