Freelancer / 2022 ஜூன் 04 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாவனையாளர்களால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின் நோர்வூட் பகுதிக்கு சமையல் எரிவாயு நேற்று (03) விநியோகம் செய்யப்பட்டது. இந்த எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் சிலருக்கு மாத்திரம் எரிவாயு வழங்கப்பட்டதையடுத்து, எரிவாயு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், எரிவாயு பாவனையாளர்கள் சிலிண்டர்களை வீதியின் குறுக்கே வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் தலையிட்டு பதுக்கி வகைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தனர். இதனை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளனர். (a)
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago