2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Gavitha   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளையில் நகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு நேற்று புதன்கிழமை (06) இரவு வந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த பணியாளர்களை கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுதாக மூடும் தலைக்கவசத்தை அணிந்துக்கொண்டு வந்தவர்களே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள சி.சி.டீ.வி கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X