2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

எவன்காட் வழக்குடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவன்காட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், இன்று (27) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி 816 துப்பாக்கிகள் மற்றும் 2 இலட்சத்துக்கும் அதிக ரவைகளுடன் காணப்பட்ட எவன்காட் ஆயுதக்கப்பல் தொடர்பான வழக்குடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவன்காட் கடற்பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட வி.என். தியபலனகே என்ற சந்தேக நபர், இன்று அதிகாலை 00.15 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த  SQ 468 என்ற விமானத்தில் வந்த நிலையில் விமானநிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .