Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜூலை 13 , மு.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதன்போது, இந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வர்த்தக சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் சாதகமான திருத்தங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம், தற்போதைய நிலைமை மற்றும் இந்தத் தீர்வை வரிக் கொள்கை செயல்படுத்துவதுடன் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் தொடர்பில் ஏற்றுமதிக் கைத்தொழில் தொடர்பான அனைத்து தரப்பினருடனும் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்த சவாலான நேரத்தில், அதன் நேர்மறையான அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி புதிய சந்தை அணுகுமுறைகளை அடையாளம் காண அரசாங்கம் மற்றும் தனியார் துறையும் இணைந்து செயற்படுவதன் அவசியம் மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கான வாய்ப்புகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
17 minute ago
30 minute ago
32 minute ago