2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஏ-340 சேவையிலிருந்து விலகிக்கொண்டது

Princiya Dixci   / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடம் கடைசியாக இருந்த ஏ-340 என்ற எயார்பஸ் விமானம், தனது சேவையிலிருந்து நேற்று (07) வியாழக்கிழமையுடன் விலகிக்கொண்டது. 

இறுதியாக இந்த விமானம், சென்னையிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு, தனது இறுதிப் பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்தது. 

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடம் ஏ-340 ரக விமானங்கள் ஆறு இருந்தன. பிரான்ஸ் தயாரிப்பான இந்த ரக விமானங்கள், நான்கு எஞ்சின்களை கொண்டிருக்கும். 

இந்த விமானத்தில் பணியாளர்கள் 15 பேர் உட்பட, 300 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கமுடியும். 

இந்த விமானங்களுக்கு பதிலாக ஏ-330-300 வகை எயார் பஸ் விமானங்களை பயன்படுத்த ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X