2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டமைக்கு பிரதமர் ரணில் மகிழ்ச்சி

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய நாடு என அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறித்து,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தலைவர்  பக்தாதி கொல்லப்பட்டதை  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (27) உறுதிப்படுத்திய சற்று நேரத்தில், பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காக,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க படையினருக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X