2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

‘ஐஸ்’ஸூடன் கைதான சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

S.Renuka   / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சட்டதரணி ஒருவர் கெசல்வத்தை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு, வாழைத் தோட்டம் – சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் அமைந்துள்ள இருண்ட மற்றும் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் கைதான சட்டதரணியிடமிருந்து 130 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், அதனை உட்கொள்ள பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் சட்டதரணி அடையாள அட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைத் தோட்டம்  பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த இருண்ட கைவிடப்பட்ட கட்டிடத்திற்குள் நுழைந்து மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபர் ‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டதரணி அடையாள அட்டையை பரிசோதித்த போது, அவர் 1996ஆம் ஆண்டு சட்டதரணியாகப் பதவியேற்ற நபர் என்பதும், புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சட்டதரணி என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், களுபோவில – சரணங்கர வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X