Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 11 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களுக்கு பயப்படும் கட்சி அல்லவென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
113 பெரும்பான்மை இல்லாமல் நாம் அல்ல நாடாளுமன்றத்தைக் கலைத்தது. நாம் இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று, மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டிய பிறகு மீண்டும் இந்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தால் என்ன நிலைமை ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்துக்கு நாம் மட்டுமல்ல பல கட்சிகளும் நீதிமன்றத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளோம். நாம் அலரி மாளிகையிலிருந்து செல்ல மாட்டோம். இன்னும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago