Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்துக் கொண்டே அரசாங்கத்துக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று தனது அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
தான் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகவில்லை என்றும், அமைச்சுப் பதவியைப் பெற்றேன் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அல்லது கட்சியிலிருந்தோ தன்னை விலக்க முடியாதெனவும் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் செல்லாமல் வேறொரு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்ற முதலாவது நபர் தான் அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவும் தேசிய தேவைக்காக இவ்வாறு செய்துள்ளாரென்றும் அமைச்சர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
நான் இந்த இந்த அரசாங்கத்தை அமைக்க இணங்கியமை நாட்டுக்கு நல்ல அரசாங்கம் தேவை என்பதாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்த அவர், ஜக்கிய தேசியக் கட்சி மாற்றமடைய வேண்டுமென தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago