2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஐ.தே.க ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்கால தடை

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி, கொழும்பு-03 கொள்ளுப்பிட்டிய பகுதியில் இன்று (30) முன்னெடுக்கவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ​மேலதிக நீதவான் பிரியந்த லியனகே மேற்கண்டவாறு இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஐ.தே.கவின் ​பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம் அரச பகுதிகளுக்கு நுழைய முடியாது.

மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், ​ஆர்ப்பாட்டத்தை நடத்துவது மற்றும் மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல் ஆகியன இந்த இடைக்கால தடையுத்தரவின் கீழ் தடைச்செய்யப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்டப் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, கொழும்பு மேலதிக நீதவானினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .