Editorial / 2019 நவம்பர் 05 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு, சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி எச். பெனாண்டோ இன்று (05) உத்தரவிட்டார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு அவரது வீட்டிலிருந்து சட்டவிரோத துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினருக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து பிணை நிபந்தனை வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர், இரு முறை அதனை மீறியதாக நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து, சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
45 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
1 hours ago