2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க மாநாட்டில் சஜித் பங்கேற்கமாட்டார்?

Editorial   / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பாக கலந்து கொள்ள உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சனிக்கிழமை (20) காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

இந்த ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உட்பட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் குழு கலந்து கொள்ள உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X