2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஐ.நாவில் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 27 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.

ஐ.நா பொதுச் சபையின் 80 ஆவது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று உரையாற்றினார். தனது உரையில் அவர், “பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது. அந்த அங்கீகாரம், இஸ்ரேலியர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு இணையானது. இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் வெட்கப்பட வேண்டும். சிறிய ஆதரவுடன் சுமார் ஏழு மோதல்களை இஸ்ரேல் கையாள்கிறது” என்று பேசினார்.

முன்னதாக தனது உரையை நிகழ்த்துவதற்காக நெதன்யாகு மேடைக்கு வந்த சில நொடிகளில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவையில் இருந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் தங்கள் இருக்கைகளை விட்டு உடனடியாக எழுந்து கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.

இதனால் நெதன்யாகு உரையின் போது பெரும்பாலான இருக்கைகள் வெற்றிடமாக இருந்தன. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெதன்யாகுவின் உரை காஸா எல்லையில் ஒலிப்பெருக்கிகள் வாயிலாக நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .