2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஐ. நா வெசாக் கொண்டாட்டம்: ஜனாதிபதி இன்று உரை

Freelancer   / 2025 மே 06 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்த உள்ளார்.

இலங்கை நேரப்படி  இன்று  (06)  காலை 7.40 மணியளவில் ஜனாதிபதி  ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது வெசாக் தின நிகழ்வில் பிரதான உரையை நிகழ்த்த உள்ளார். இந்த உரை இன்று  உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மாலை 5:00 மணிக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X