2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஒக்டோபர் மாத எரிவாயு விலை குறித்த அறிவிப்பு

Simrith   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் மாதத்திற்கான எல்பி எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு;

  • 12.5 கிலோ – ரூ. 3,690
  • 5 கிலோ - ரூ. 1,482
  • 2.3 கிலோ – ரூ. 694

தற்போதைய மாவட்ட வாரியான விலைகள் பின்வருமாறு; https://www.litrogas.com/price-list/ 

இதற்கிடையில், லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி, ஒக்டோபர் மாதத்திற்கான அதன் உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று அறிவித்துள்ளது.

இந்த முடிவை லாஃப்ஸ் எரிவாயு பிஎல்சி, கிளஸ்டர் தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் இன்று அறிவித்தார். 

அந்த வகையில், லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு;

  • 12.5 கிலோ – ரூ. 4,100
  • 5 கிலோ – ரூ. 1,645
  • 2 கிலோ - ரூ. 658

மாவட்ட வாரியான தற்போதைய விலைகள் பின்வருமாறு; https://www.laugfsgas.lk/pricelist.php


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X