2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஒக்கம்பிட்டி ஓஐசிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

லஞ்சம் கேட்டு பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒக்கம்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) ஐ,  ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, திங்கட்கிழமை (04)  உத்தரவிட்டார்.

 ஒக்கம்பிட்டி காமினியபுர பகுதியில் மணல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். மணல் வியாபாரத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ள மாதத்திற்கு   50,000  ரூபாவை சந்தேக நபர் தன்னிடம் கேட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   

முறைப்பாட்டாளரிடம் இருந்து ரூ 47,000  ரூபாயை சந்தேக நபர்   பல சந்தர்ப்பங்களில் லஞ்சமாக பெற்றதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

விசாரணைகள் இன்னும் தொடர்வதால்,  சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றத்தில் அதிகாரிகள் கோரி நின்றனர்.

 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் ஜூலை 28 ஆம் திகதி  கைது செய்யப்பட்டு    பின்னர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர், ஆகஸ்ட் 4 வரையிலும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X