Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 17 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதனூடாக நாட்டைப் பிரிக்கவோ, பௌத்த மதத்தைச் சீர்குலைக்கவோ போவதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'பிரிவினை எனும் சொல்லை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என்று, சிறிய அரசியல் குழுக்களிடம் கேட்டுக்;கொள்கின்றேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் அலரி மாளிகையில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஆற்றிய விசேட உரையொன்றிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'1977ஆம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்தன எம்மிடம் ஒப்படைத்த கடமையின்படி, 1978ஆம் ஆண்டு, நல்ல அரசியலமைப்பை நாம் கொண்டு வந்தோம். ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால், அது உடைக்கப்பட்டுவிட்டது.
21ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குத் தேவையான அரசியலமைப்பையே நாம் உருவாக்க வேண்டும். அதற்கு, நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
அத்துடன், 'புதிய அரசியலமைப்பு, பொதுமக்களின் கருத்துகளின் ஊடாகவே உருவாக்கப்படும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் கருத்துகளைப் பெறுவதற்காக சமூக வலைத்தளங்களை, உலகில் முதன்முறையாக நாம், பயன்படுத்தவுள்ளோம். தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாட்டைப் பயன்படுத்துபவர்களே, எதிர்காலத்தில் வாழப் போகின்றனர், நாமல்ல' என்றும் பிரதமர் கூறினார். தற்போது, குழுவைத்தான் நியமித்துள்ளோம். அரசியலமைப்பை இன்னும் முன்வைக்கவில்லை. அதனை முன்வைத்த பிறகு, திருடன் என்றால் திருடன் என்று சொல்லுங்கள், நல்லது என்றால் நல்லது என்று கூறுங்கள்.
18ஆவது சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து ஏகாதிபத்தியத்தை உருவாக்கியவர்கள் போல, நாம் செயற்படப் போவதில்லை.
இன்று ஏகாதிபத்தியம் இல்லை. நாம், சர்வாதிகாரமாகச் செயற்படப் போவதில்லை.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை. நான் ஒரு பௌத்தன், இலங்கைச் சிங்களவன். இந்தப் புதிய அரசியலமைப்பு ஊடாக, நாட்டின் ஒற்றையாட்சிக்கும் பௌத்த மதத்துக்கும் எந்தவித பங்கமும் ஏற்படாது.
அரசியலமைப்பை உருவாக்க, அனைவரது யோசனைகளையும் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்லத் தயாராகவே இருக்கின்றோம். அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும், இது தொடர்பில் பேசியுள்ளேன்.
21ஆம் நூற்றாண்டுக்குப் பொருந்தக் கூடியவாறான ஓர் அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும், அனைத்துத் தரப்பினரது கருத்துகளும் யோசனைகளும் உள்வாங்கப்படும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்துக்கு பாதிப்புக்கள் ஏற்பட இருப்பதாகச் சிலர், பொய்யான பிரசாரங்களைப் பரப்புகின்றனர்.
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில், மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். என்ன விடயங்களை உள்ளடக்கப் போகின்றோம் என்று, எமக்கு இதுவரை தெரியாது.
அரசியலமைப்;பைத் திருத்தும் குழுவொன்றைதான், தற்போது நியமித்துள்ளோம். இந்தநிலையில், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்று, எவ்வாறு கூறுகின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதனை வைத்து, அரசியல் செய்ய வேண்டாம் என்று, சிறு சிறு அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டைப் பிளவுபடுத்த, ஒருபோதும் நாம் இடமளிக்க போவதில்லை.
இந்த நாட்டை ஒன்றுபடுத்த வேண்டிய தேவை, எனக்கிருக்கின்றது. நாட்டை ஒன்றிணைக்கவேண்டும். அந்தப் பொறுப்பை, ஜனாதிபதிக்கும் எனக்கும், மக்கள் வழங்கியுள்ளனர். நாட்டைப் பிரிப்பதற்கு, ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். மூடிய அறைக்குள் இருந்துகொண்டு, அரசியலமைப்பை உருவாக்கும் தேவை எனக்கில்லை' என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறிப்பிட்டார்.
19 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago