2025 மே 01, வியாழக்கிழமை

ஒமிக்ரோன் தொற்றாளர் எங்கே?

Freelancer   / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர்,  நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான, விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில பி.சி.ஆர் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னரே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

எனினும் அவர் தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

விமான நிலையங்களில் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுப்பது தங்களுக்கும், உலகில் வேறு நாடுகளுக்கும் முடியாமல் போயுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .