Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின், 74ஆவது ஆண்டு விழா, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் மிகவும் எளிமையான முறையில், நேற்று (06) நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் ஸ்தாபகர் மறைந்த டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிந்து அஞ்சலி செலுத்தினார்.
கட்சியின் தலைமைத்து பதவி, பெரும்நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் போது, ஆண்டுவிழா அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரேனும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத நிலையிலேயே 74ஆவது ஆண்டுவிழா அனுஷ்டிக்கப்பட்டது.
ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல், ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடைபெற்றது. அதில், ஐக்கிய தேசிய கட்சி, எந்தவோர் ஆசனத்தையும் பெறவில்லை.
இதேவேளை, அக்கட்சிக்கு கிடைத்துள்ள ஒரேயொரு தேசியப் பட்டியலும் இன்னும் நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago