2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஒரே நேரத்தில் 108 ஜோடிகளுக்கு திருமணம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் வாழ் தமிழ் உணர்வாளரது நிதிப் பங்களிப்பில் யாழ். மாவட்டத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலை காரணமாக இல்லற வாழ்வில் இணைய முடியாதிருக்கும் 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடக சந்திப்பொன்றை நடத்தி இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட  ரி.ரி. துரை சுமதினியின் பங்களிப்பிலேயே குறித்த 108 தம்பதியினருக்கு திருமணம் செய்துவைக்கப்பவுள்ளது

தாலி, சீதனம் உள்ளிட்ட அனைத்தும் குறித்த தம்பதியினருக்கு வழங்கப்பட்டு தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் எதிர்வரும் வியாழகாகிழமை (28)  குறித்த 108 தம்பதியினருக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X