Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடம், ஒரு இலட்சம் ஓட்டோ சாரதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
முதற்கட்டமாக 2,000 பேருக்கு இவ்வாறு தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதிகாரசபையின் தலைவர் சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில், 78 இலட்சம் ஓட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 இலட்சத்துக்கு மேற்பட்டோர் தமது வாழ்வாதார தொழிலுக்காக ஓட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்பயிற்சியில் இணைந்துகொள்ள விரும்புவோர் 1951 என்ற இலக்கத்துக்கோ அல்லது 011-22888782 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அழைப்பை ஏற்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள முடியுமென, தொழிற்பயிற்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago