2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

கொச்சிக்கடையில் இருவர் மரணம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொச்சிக்கடை ஓயா வீதியைச் சேர்ந்த சின்னையா பாக்கியம் என்ற 77 வயது பெண்மணியும், பள்ளியா வீதியைச் சேர்ந்த ஏ.எச். ஸ்ரீ நமன் என்ற 55 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.

கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார், அதேவேளை  வயதான பெண் வீட்டினுள் வெள்ளத்தில் அகப்பட்டு இறந்தார். மற்றைய நபரை கவனித்துக் கொள்ள இருந்த நபர் வெளியே சென்ற வேளையில்  தனியாக இருந்த நபர் வெள்ளத்தில் அகப்பட்டு இழந்துள்ளார் என்று நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X